பாதுகாப்பு காருடன் படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளிலேயே செல்லும் நடிகை ராகுல் ப்ரீத் சிங்!

Actress Rahul Preet Singh currently cycles 12 km daily to the filming site to keep her body fit, With security car for guard

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக நடிகை ராகுல் பிரீத் சிங் படப்பிடிப்பு தளத்திற்கு தற்போது தினமும் 12 கிலோமீட்டர் சைக்கிளிலேயே சென்று வருகிறாராம்.

முந்தைய காலத்தில் எல்லாம் நடிகர்கள் தான் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என விரும்புவார்கள். ஆனால் தற்பொழுது நடிகர்களைக் காட்டிலும் நடிகைகள் இதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்து, அழகாக மாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ராகுல் பிரீத் சிங் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்தாலும் அவருக்கு தற்போது பல பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதிலும் அவர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

யோகா, உடற்பயிற்சி என தனது இணையதள பக்கத்தில் எப்பொழுதும் இது தொடர்பான தனது புகைப்படங்களை பதிவு செய்து வரும் ராகுல் ப்ரீத் சிங் தற்போது இந்தியில் அஜய் தேவ்கன் உடன் இணைந்து மே டே எனும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தளத்திற்கு தினமும் 12 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்று வருகிறாராம். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் அவர் தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். போக்குவரத்து மற்றும் ஆள் நடமாட்டம் குறைவான ஏரியா என்பதால் அந்த படப்பிடிப்பு தளத்துக்கு தனது பாதுகாப்பு கார் ஒன்றுடன் சைக்கிள் ஒட்டியபடியே தினமும் சென்று வருகிறாராம். இதோ அந்த வீடியோ,

unknown node