"கமல் பாணியில் சன்டிவியில்"களமிரங்கும் விஷால்...!!

நடிகர் கமல் தற்போது நடிப்பு தாண்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும் நிகழ்ச்சிகள் பங்கேற்று தொகுத்து வருகிறார்.அதில் ஒன்று தான் பிக்பாஸ் இந்த நிகழ்ச்சி முலம்

நடிகர் கமல் தற்போது நடிப்பு தாண்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும் நிகழ்ச்சிகள் பங்கேற்று தொகுத்து வருகிறார்.அதில் ஒன்று தான் பிக்பாஸ் இந்த நிகழ்ச்சி முலம் தன்னை மக்களிடம் முழுமையாக தெரியப்படுத்தும் மேடை என்று நடிகர் கமலே தெரிவித்தார்.தற்போது மக்கள் நீதி மையத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node

இவரை பின்பற்றி சன் டி.வி-யில் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார்.நடிகர் விஷால் கதாநாயகனாக நடிப்பதைத் தாண்டி, பல்வேறு பொது  நடவடிக்கைகளிலும்  ஈடுபட்டுவருகிறார். படங்களில் நடிப்பதைவிடத் தீவிரமாக நடிகர் சங்கத் தேர்தல், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றார்.

unknown node

அதையடுத்து, ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத் தேர்தலிலும் போட்டியிட முயற்சி மேற்கொண்டார். இருப்பினும், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதையடுத்து, கடந்த 20 நாள்களுக்கு முன்னதாக அவரது ரசிகர் மன்றத்தை ‘விஷால் மக்கள் இயக்கம்’ என மாற்றினார். இந்த நிலையில், அவர் சன் டி.வி-யில் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார்.

unknown node

இன்னும் அந்த நிகழ்ச்சியின் பெயர் அறிவிக்கப்படவில்லை. அந்த நிகழ்ச்சிக்கான 11 விநாடிகள் ஓடக்கூடிய ப்ரோமோவை சன் டி.வி அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த ப்ரோமோவில், ‘விதைத்தவன் தூங்கலாம். விதைகள் தூங்காது. அன்பை விதைப்போமா…’ என்று கேள்வி எழுப்புகிறார்.

DINASUVADU

https://twitter.com/SunTV/status/1042020181243912192