ஆளே இல்லாத வீட்டுக்கு அரசு செலவில் இலவச போலீஸ் பாதுகாப்பா? புது சர்ச்சையில் நடிகர் சூர்யா!

சென்னை: சென்னையில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக இலவசமாக போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

surya house in chennai

சென்னை:சென்னையில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக இலவசமாக போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் சூர்யா கடந்த ஆண்டு சென்னையில் இருந்து மும்பைக்கு தனது வீட்டை மாற்றி கொண்டார். ஆம், மும்பையில் ரூ.70 கோடிக்கு மேலாக ஒரு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பில் சூர்யா தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

2021 ஆம் ஆண்டு வெளியான ஜெய் பீம் திரைப்படம், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தவறாக காட்டியதாக எதிர்ப்பு எழுந்ததால், பாமக-வினர் சார்பில், படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் சூர்யா மீது புகார் அளிக்கப்பட்டது.

அந்த சமயத்தில் இந்த விவகாரம் பெரிய அளவில் சென்றதால், சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு பாதுகாப்பு அழிக்கப்பட்டு வந்தது. தற்பொழுது, நிலைமை சரியாகிய பின்பும், நடிகர் சூர்யா மும்பைக்கு சென்றபிறகும், இன்று வரை ஆயுதம் ஏந்திய போலீசார் 4 பேர் தினசரி பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அமைச்சரின் பரிந்துரையில் தான் இலவசமாக போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவது தெரிய வந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தற்போது, சூர்யா குடும்பத்துடன் மும்பையில் வசித்து வரும் நிலையில், அவரது சென்னை வீட்டுக்கு அரசு செலவில் பாதுகாப்பு ஏன் என பலர் கேள்வி எழுப்புகின்றனர்.