அடுத்த சம்பவம் ரெடி…முடிந்தது ‘எஸ்கே 23’ பூஜை! வெளியானது புகைப்படங்கள்!

SK23 - SivaKarthikeyan

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் “எஸ்கே23” படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள்எ ன்பது குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அயலான் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் ‘எஸ்கே 21’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, கமல்ஹாசன் தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சமீபத்தில், இப்படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் 23வது படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்று தகவல் வெளியான நிலையில், இப்பொது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டடுள்ளது.

ஓடிடியில் வெளியானது ஷாருக்கானின் ‘டன்கி’ திரைப்படம்!

SK23 Pooja Stills
SK23 Pooja Stills [ Image -@ARMurugadoss]
அதாவது, தற்காலிகமாக ‘SK23’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை விழா நடந்து முடிந்துள்ளது. தற்பொழுது, படத்தில் பூஜை விழா விழாவில் படக்குழு அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். அதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

SK23 Pooja Stills 3
SK23 Pooja Stills 3 [ Image -@ARMurugadoss]
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் என்று கூறப்படுகிறது. மேலும், படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். படத்திற்கான முதல் செட்யூல் சென்னையில் தொடங்கியுள்ளது.

SK23 Pooja Stills 1
SK23 Pooja Stills 3 [ Image -@ARMurugadoss]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்