கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் நிதியுதவி!

Actor Sivakarthikeyan donates Rs 25 lakh for corona prevention work.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவலானது மிகத் தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக,பல மாநிலங்களில் இரவு நேர மற்றும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,கொரோனா தடுப்பு பணிகளுக்காக மக்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் தங்களால் இயன்ற நிதியுதவியை அளித்து வருகின்றனர்.

அந்த வகையில்,நடிகர் சிவகார்த்திக்கேயன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து,ரூ.25 லட்சத்தை கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.