பிரபல திரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்று விட்டதாக நடிகை ராணி தெரிவித்தார்.படப்பிடிப்பின் போது நடிகர் சண்முகராஜன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை ராணி புகார் அளித்தார்.இந்நிலையில்நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்த பாலியல் புகாரை நடிகை ராணி தற்போது வாபஸ் பெற்றுள்ளார்.நடிகர் சங்கத்தின் மூலமாக சமரசம் ஏற்பட்டது என்று நடிகர் சண்முகராஜன் தெரிவித்துள்ளார்.
unknown nodeஇந்த புகார் அளித்த நடிகை ராணி சீரியலில் தனக்கு கணவராக நடிக்கும் சண்முகராஜன், காட்சிகளின் போது தவறான எண்ணத்துடன் தொடுவதாகவும், அடிப்பது போன்ற காட்சிகளில், உண்மையிலேயே தன்னை அடித்ததாகவும் புகார் கூறினார்.
unknown nodeஇதுகுறித்து அவரிடம்கேட்டபோது தன்னையும், தனது கணவரையும் தாக்கியதாகவும் நடிகை ராணி செங்குன்றம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் படப்பிடிப்பு சமயங்களில் தன்னுடன் உணவருந்த வருமாறும், தனியாக தங்க அழைத்ததாகவும் சண்முகராஜன் மீது அவர் பரபரப்பு புகார் அளித்தார்.இந்த நிலையில் தனது தொலைக்காட்சி தொடர் நின்று விடக்கூடாது என்பதற்காக, சண்முகராஜன் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்று விட்டதாக நடிகை ராணி தெரிவித்தார்.
unknown nodeஇதனிடையே குற்றம்சாட்டப்பட்ட நடிகர் சண்முகராஜன் செங்குன்றம் காவல்நிலையத்தில் ஆஜராகி இது குறித்து விளக்கம் அளித்தார் அதில்படப்பிடிப்பின் போது நடிகை ராணியை அடித்தது உண்மைதான் ஆனால் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறுவது தவறு என்றும் மேலும் நடிகர் சங்கத்தின் மூலமாக இப்பிரச்சனையில் சமரசம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
DINASUVADU