ஹீரோயின்களுடன் பார்ட்டி! 1000 கோடி செலவு…சிரஞ்சீவியை விமர்சித்த மன்சூர் அலிகான்!

mansoor ali khan about chiranjeevi

நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி பேசிய விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழ் பிரபலங்கள் முதல் தெலுங்கு பிரபலங்கள் வரை பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர். குறிப்பாக தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி  த்ரிஷாவுக்கு ஆதரவாக பேசி மன்சூர் அலிகான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

பிறகு இந்த விவகாரம் குறித்து எதிர்ப்பு மிகவும் அதிமாக எழுந்த நிலையில், நான் பேசியது தவறு தான் நான் பேசியது த்ரிஷாவை காயப்படுத்தி இருந்தது என்றால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் ” என மன்சூர் அலிகான் தெரிவித்து இருந்தார். அதன் பிறகு த்ரிஷா தப்பு செய்வது மனிதம் மன்னிப்பது தெய்வீகம் என கூறியிருந்தார்.

சுத்தமா வரல எல்லாரும் கழுவி ஊத்துனாங்க! சோக கதையை சொன்ன ரோஷினி ஹரிப்ரியன்!

இந்த விவகாரம் அதனோடு முடிந்த நிலையில், தற்போது மன்சூர் அலிகான் சிரஞ்சீவி  குறித்து பரபரப்பான கருத்துக்களை சமீபத்தில் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு வக்கிர புத்தி இருக்குன்னு சிரஞ்சீவி கூறினார். ஆனால் என்னை அப்படி கூறிவிட்டு அவர் என்ன பண்ணினார்? கட்சிக்காக 1000 கோடிகளை செலவு செய்தார். அதில் தான் ஹீரோயின்களுக்கு பார்டியும் வைக்கிறார். அந்த பணங்களை வைத்து ஏழைகளுக்கு கொஞ்சம் கூட உதவவில்லை.

அவருடைய தம்பி பவன் கல்யாணம் அப்படி தான் இவங்க எல்லாம் சேர்ந்து என்ன தான் பண்ணறாங்கன்னு தெரியல அந்த பணத்தை எல்லாம் தங்களுக்குத்தான் பயன்படுத்துறாங்க. சிரஞ்சீவி ஒவ்வொரு வருடமும் பழைய ஹீரோயின்களுக்கு விருந்து வைப்பார்.  ஹீரோயின்களுக்கு மட்டும் பார்ட்டி கொடுக்கிறார்.

அந்த மாதிரி பார்ட்டிகள் கொடுக்க அவருக்கு அது பிடிக்கும். ஆனால் என்மீது விமர்சனங்கள் வந்தபோது. என்னைக் கூப்பிட்டு உண்மையில் என்ன நடந்தது என்ன பிரச்சனை என்பதனை பற்றி கேட்டு இருக்கலாம். அப்படி கேட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.  த்ரிஷா, குஷ்பு ஆகியோர் மீது ரூ. 10 கோடி, சிரஞ்சீவி மீது ரூ. 20 கோடி என அவதூறு வழக்கு போட போறேன். அப்போது பெறப்படும் அந்த பணம் தமிழகத்தில் குடிபோதையில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும்” எனவும் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

cake inside Pakistan High Commission
PM Narendra Modi’s stern warning
Chhattisgarh Naxal Encounter
Pahalgam terror attack video
Pahalgam Attack news
Kashmir Attack