நடிகர் பரத்தின் அடுத்த படம் அறிவிப்பு.!ஹீரோயின் பிக்பாஸ் நடிகை.!

Actor Bharath is all set to play the heroine in the next film Big Boss Famous Janani Iyer.

நடிகர் பரத் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் பிக்பாஸ் பிரபலமான ஜனனி ஐயர் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பரத் . தற்போது இவர் 8,6 ஹவர்ஸ், ராதே, நடுவன்,காளிதாஸ், பொட்டு,சிம்பா உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் நடிகர் பரத் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.’முன்னறிவான்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தினை விஜயராஜ் என்பவர் இயக்குகிறார் .

லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பரத்திற்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான ஜனனி ஐயர் நடிக்கவுள்ளார்.மேலும் இந்த படத்தில் மிர்ச்சி செந்தில்குமார், கரு பழனியப்பன், சின்னிஜெயந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது.அதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

unknown node