சென்னை :படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில நாட்களாக அஜித் துபாயில் ரேஸ் கார்களுக்கு பணத்தை வாரி இறைத்து வருகிறார்.
நடிகர் தனது கார் சேகரிப்பில் சொகுசு கார்களை சேர்த்து வருவதாக பலர் கருத்து தெரிவித்த நிலையில், ஒரு பெரிய திட்டத்தை அறிவித்தார். ஆம், அஜித் ஐரோப்பாவின் ஜிடி4 கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்வதாக அறிவித்தார்.
நடிகர் அஜித் ஏற்கனவே பல கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் கலந்து கொண்டவர். இந்த நிலையில், துபாயில் அவர் பயிற்சியில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொண்ட காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
வரவிருக்கும் ஐரோப்பிய பந்தய சீசனுக்காக அஜித்து தயாராகி வருகிறார். இதற்காக, ஃபெராரி 488 EVO கரை ஒட்டி பயிற்சி மேற்கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
unknown nodeஇதற்கிடையில், அஜித் குமார் ‘விடாமுயற்ச்சி’ படப்பிடிப்பை முடித்ததை தொடர்ந்து “குட் பேட் அக்லி” படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
