ஒருவருக்கு மூன்றாவது மனைவியானது தவறல்ல.
எல்லோருமே சிலருடன் தொடர்பில்தான் இருக்கின்றனர் என்றும் குற்றசாட்டியுள்ளார்.
நடிகை நேஹா தமிழ் சினிமாவில், மவுனம் பேசியதே, இனிது இனிது காதல் இனிது உள்ளிட்ட பல தமிழ் நடித்துள்ளார். இவர், தமிழ் மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே 2 திருமணம் செய்து கொண்ட ஷர்துல் பயஸ் என்பவரை மூன்றாதாக திருமணம் செய்துள்ளார்.
இதுகுறித்து பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்துள்ளனர். நீண்ட நாள் அமைதி காத்த நேஹா, தற்போது காட்டமான கருத்தினை தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது,
உலகத்தில் எங்குமே நடக்காமல், நான் மட்டுமே, ஒருவருக்கு மூன்றாவது தாரமாக போனதாக சொல்கின்றனர். இன்று, ஒருவர் மூன்று அல்லது நான்கு பேரை திருமணம் செய்து கொள்வதெல்லாம் வாடிக்கையாகி விட்டது கூறியுள்ளார்.
unknown nodeமேலும் அவர் கூறுகையில், வாழ்க்கைக்காகத்தான் இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்கின்றனர். இது ஏதோ மிகப்பெரிய தவறு போல பேசுவது சரியான அணுகுமுறை அல்ல. ஒரு ஆண், ஏற்கனவே இரு பெண்ணோடு உறவில் இருந்தார் என்பதைத்தான் குற்றமாக இந்த சமூகம் பார்க்கிறது என்றும், அந்த வகையில் பார்க்கும்போது, யாரும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது என்றும், திருமணத்துக்கு முன்பே கூட, எல்லோருமே சிலருடன் தொடர்பில்தான் இருக்கின்றனர் என்றும் குற்றசாட்டியுள்ளார்.