சூர்யா ரசிகர்களுக்கு இன்று மாலை காத்திருக்கும் ஸ்பெஷல் ட்ரீட்.?!

இயக்குனர் பாலா - நடிகர் சூர்யா கூட்டணியில் வெளியான படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர்களது கூட்டணியில் வெளியான நந்தா, பிதா மகன் ஆகிய படங்கள்

இயக்குனர் பாலா – நடிகர் சூர்யா கூட்டணியில் வெளியான படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர்களது கூட்டணியில் வெளியான நந்தா, பிதா மகன் ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 16-ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் “சூர்யா 41” படத்தில் இணைந்துள்ளார்கள்.

இந்த படத்தை 2டி நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். படத்தில் ஜோதிகா, கீர்த்தி ஷெட்டி, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிப்பு கோவாவில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று இயக்குனர் பாலா தனது 56-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, சூர்யா 41 படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என 2 டி நிறுவனம் ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

unknown node