இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் இயக்கத்தில் பாலிவூட் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
unknown nodeஇந்நிலையில் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டி வரும் நவம்பர் மாதம் 28-ம் தேதி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் தொடங்கவுள்ளது. ஒடிசாவில் ஹாக்கி உலகக்கோப்பை நடப்பதைப் பிரபலப்படுத்த அம்மாநில அரசு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் ஒன்றை வெளியிட ஒடிசா அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
unknown nodeஇதற்காக இந்தி பாடலாசிரியர் குல்சார் பாடல் எழுதியுள்ளார்.அவர் எழுதிய வரிகளுக்கு இசையமைத்து இயக்கியுள்ளாராம் ஏ.ஆர்.ரஹ்மான். ‘ஜெய் ஹிந்த் ஜெய் இந்தியா’ எனத் தொடங்கும் இந்தப் பாடலில் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ளார். இந்த பாடலுக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கத்தில் முதன்முறையாக நடித்ததை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் நடிகர் ஷாருக்கான் தனது இந்த மகிழ்ச்சியான தகவல்களை தெரிவித்துள்ளார்.
unknown nodeஇந்நிலையில் நவம்பர் 28-ம் தேதி தொடங்கி டிசம்பர் 16-ம் தேதிவரை நடக்கும் ஹாக்கி போட்டியின் தொடக்கவிழா நவம்பர் 27-ம் தேதி புவனேஷ்வர் நகரிலுள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஷாருக்கான் இணைந்து பாடலை வெளியிட உள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கனவே ‘லீ மஸ்க்’ என்ற வெர்ட்சுவல் ரியாலிட்டி திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
DINASUVADU