தெலுங்கு சினிமாவில் மாபெரும் பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் “சைரா நரசிம்ம ரெட்டி”.இப்படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி , அமிதாப் பச்சன், நயன்தாரா, விஜய் சேதுபதி என பல நடிகர்கள் நடித்து நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடமே தொடக்கி தற்போது வரை படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இந்நிலையில் “சைரா நரசிம்ம ரெட்டி” படத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட செட்டில் திடீரென தீ பிடித்தது.
இந்த தீ விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்தது. ஐதராபாத் அருகே கோகபேட்டில் உள்ள தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் பண்ணை வீட்டில் இந்த படத்திற்காக செட் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது .
unknown node