சென்சூரி அடித்த 96...!!நீங்காத நினைவுகளுடன் புத்தக வடிவில் மீண்டும் வருகிறது..!!

ரசிகர்களை தன் வாழ்நாள்களை திரும்பி பார்க்க வைத்த 96 படம் குறித்த புத்தகம் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா நடிப்பில் இயக்குநர்

ரசிகர்களை தன் வாழ்நாள்களை திரும்பி பார்க்க வைத்த96 படம் குறித்த புத்தகம் வெளியாகியுள்ளது.

unknown node

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா நடிப்பில் இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகிய 96 படம் ரசிகர்களிடையே சென்றடைந்த இந்தாண்டிற்கான சிறந்த படமாகும்.இதில் ராம்-ஜானு கதாபாத்திரம் வெகுமாக ரசிகர்களை தங்களது பள்ளி பருவத்தை சற்று திரும்பி பார்க்கவைத்தது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் படத்திற்கு பாராட்டுகள் குவிந்தது.ஒரு படம் புத்தகமாக உருவாகி வெளிவர தயாராகி உள்ளது.இந்த படத்தில் இடம்பெற்ற ராம்-ஜானு கதாபாத்திரத்தை கொண்டே இடம்பெறுகிறது.இந்த 96 என்ற கதையை தனிப்பெருங்காதல் என்ற தலைப்பில் புத்தகம் உருவாகியுள்ளது.

unknown node

எழுத்தாளர் சி.சரவண கார்த்திகேயன் இது குறித்து ஃபேஸ்புக் பக்க பதிவொன்றில் ராம்களும், ஜானுக்களும் இங்கே இருப்பதால் தான் இந்தப் படம் பெருவாரியான வெற்றி. ராமாக, ஜானுவாக இருக்க முடியவில்லையே என்ற பெருவலி தான் அதனின் செல்வாக்குக்குக் காரணம். எந்தவகையில் என்றாலும் நம் தமிழர்கள் காதலின் ஆன்மாவுக்கு வெகு அருகிலான படம்  96 என்று  குறிப்பிட்டு இருந்தார்.

unknown node

இந்நிலையில் தான் 96: தனிப்பெருங்காதல் என்ற  புத்தகத்தை  உயிர்மை பதிப்பகம் வெளியிடுகிறது. புத்தகம் குறித்து படத்தின் இயக்குநர் பிரேம்குமார் பேசுகிறார். புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது கூடுதல் சிறப்பாகும்.

unknown node