தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் நிலைத்து நடித்து வருபவர் நடிகை த்ரிஷா.இவர் நடித்த படங்கள் கடந்த சில ஆண்டுகளாக பாக்ஸ் ஆபிசில் சுமாரான வெற்றியை பெற்றாதால் ராசியில்லாத நடிகைகள் பட்டியலுக்கு தள்ளப்பட்டார்.
unknown nodeஇந்நிலையில் ’96’ என்ற ஒரே படத்தின் வெற்றி அவரை மீண்டும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது இந்த படம் அசத்திய நடிப்பால் அசத்திய நடிகை த்ரிஷா-விஜய்சேதுபதி கூட்டணி திரையுலகில் அடித்து நொறுக்கி வசூல் சாதனை செய்து வருகிறது.
unknown nodeமேலும் இந்த படத்தில் மற்றும் த்ரிஷாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக த்ரிஷா மிக இயல்பாக கேரக்டருடன் ஒன்றி நடித்திருந்ததால் அவரது நடிப்பை பாராட்டாதவர்களே திரையுலகில் இல்லை என்று கூறலாம்.
unknown nodeஇந்த நிலையில் தான் இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பெற்ற தயாரிப்பாளர் தில்ராஜூ, இப்படத்தில் நானி மற்றும் சமந்தாவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது நடிகை த்ரிஷாவுக்கு குவிந்து வரும் பாராட்டுக்களை அடுத்து தெலுங்கிலும் த்ரிஷாவே இந்த படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
unknown nodeஇதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரவுள்ளது. சமந்தா தற்போது தனது கணவருடன் ஓய்வில் இருப்பதால் அவர் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்றே சினிமா சுற்று வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.
DINASUVADU