ஒரே வருடத்தில் 3 திரைப்படங்கள்.., கார்த்தியின் போட்ட பக்கா ஸ்கெட்ச்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.அதன்படி , இவரது நடிப்பில் விருமன், பொன்னியின்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.அதன்படி , இவரது நடிப்பில் விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய மூன்று படங்களும் இந்த ஆண்டே வெளியாகவுள்ளது.

unknown node

இதில் முதலில் விருமன் படம் வெளியாகிறது. இந்த  படத்தை இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார். படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

unknown node

அடுத்ததாக, பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கி உள்ளார். படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

unknown node

இந்த படங்களை தொடர்ந்து, சர்தார் திரைப்படம் அக்டொபர் மாதம் 24-ஆம் தேதி தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஒரே வருடத்தில் கார்த்தியின் மூன்று திரைப்படங்கள் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஒரே வருடத்தில் 3 திரைப்படங்கள்.., கார்த்தியின் போட்ட பக்கா ஸ்கெட்ச்.!