தளபதியின் ‌மெகா ஹிட் படத்தில் பணியாற்றிய 3 இசையமைப்பாளர்கள்.!எந்த படத்தில் தெரியுமா.?

It is said that 3 composers worked on thalapathy Vijay's Thirupaachi film.

தளபதி விஜய்யின் திருப்பாச்சி படத்தில் 3 இசையமைப்பாளர்கள் பணியாற்றியதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய்.இவர் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் திருப்பாச்சி,சிவகாசி ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பதும்,அது ஹிட்டடித்ததும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் திருப்பாச்சி படத்தில் 3 இசையமைப்பாளர்கள் பணியாற்றியது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

ஆம் விஜய் மற்றும் திரிஷா நடித்து மெகா ஹிட்டடித்த திருப்பாச்சி படத்தில் 3 இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ளனர்.தேவி ஸ்ரீ பிரசாத், மணி ஷர்மா மற்றும் தீனா ஆகியோர் தான் திருப்பாச்சி படத்தின் இசையமைப்பாளர்கள்.இதில் தேவி ஸ்ரீ பிரசாத் ‘கட்டு கட்டு கீரை கட்டு’ பாடலுக்கும் ,மணி ஷர்மா ‘கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு’ பாடலுக்கும் இசையமைத்துள்ளனர்.அதற்கு அடுத்துள்ள அனைத்து பாடல்கள் மற்றும் பின்னணி இசையை தீனா இசையமைத்திருந்தார்.மேலும் இந்த படத்திலுள்ள அனைத்து பாடலுக்கும் இயக்குனர் பேரரசு தான் வரிகள் எழுதியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.