200% இதற்கு நான் பொறுப்பல்ல! வீடியோ வெளியிட்ட குக் வித் கோமாளி பவித்ரா!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சிலர் எனது பெயரைக் கெடுக்க பார்க்கிறார்கள். 200% அதற்கு நான் பொறுப்பல்ல. இதுதான் என்னுடைய ஒரிஜினல் ட்விட்டர் பக்கம் உங்களுடைய அன்புக்கு நன்றி.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி என்னவென்றால் ஒன்றும் தெரியாத கோமாளிக ளை வைத்து கொண்டு சமைக்கும் போட்டியாளர்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்பது தான்.
இந்த நிகழ்ச்சி பார்க்க அதிகப்படியான ரசிகர்கள் உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் பவித்ரா லட்சுமி கலந்து கொண்டுள்ளார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிகை மட்டுமல்லாது, சமையலிலும் திறமையானவராக உள்ளார்.
இந்நிலையில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‘சிலர் ட்விட்டர் பக்கங்கள் என்னுடையது போலவே ஆக்டிவாக இருக்கிறது. ட்வீட்டரில் எனக்கு கணக்கு இருந்தாலும், நான் அதில் அதிக ஆக்டிவாக இல்லை. இன்ஸ்டாகிராமில் தான் நான் அதிக ஆக்டிவாக இருக்கிறேன். அதை ஒரு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, சிலர் எனது பெயரைக் கெடுக்க பார்க்கிறார்கள். 200% அதற்கு நான் பொறுப்பல்ல. இதுதான் என்னுடைய ஒரிஜினல் ட்விட்டர் பக்கம் உங்களுடைய அன்புக்கு நன்றி.’ என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
This is my only twitter handle pic.twitter.com/DXZW3lJ3T5
— pavithralakshmi (@itspavitralaksh) January 21, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
“மிரட்டலுக்கு பயப்படவே மாட்டோம்”..பதிலடி கொடுத்த ஹமாஸ்! மீண்டும் எச்சரித்த இஸ்ரேல் !
February 12, 2025![israel](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/israel.webp)
LIVE : தமிழக அரசியல் நிகழ்வுகள் முதல்…சாம்பியன்ஸ் ட்ராஃபி அப்டேட் வரை!
February 12, 2025![live today news](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/live-today-news.webp)