10 ஆண்டு கால காத்திருப்பு.. தந்தையாகிறார் ராம் சரண்.! கொண்டாட்டத்தில் தாத்தா சிரஞ்சீவி.!

சிறுத்தை எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி மஹதீரா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் ராம் சரண். இந்த படத்தின் மூலம் ராம்

சிறுத்தை எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி மஹதீரா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் ராம் சரண். இந்த படத்தின் மூலம் ராம் சரண் பாண் இந்திய நடிகராக மாறிவிட்டார் என்றே கூறலாம். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மகனும் ஆவார்.

unknown node

chiranjeevi and ram charan [Image Source: Google ]

நடிகர் ராம் சரண் முன்னணி நடிகராக வளம் வந்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே உபாசனா காமினேனி என்பவரை காதலித்து கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இவர்கள் திருமணமாகி 10 -ஆண்டுகள் ஆன நிலையில், இருவரும் தங்களுடைய முதல் குழந்தையை வரவேற்கவுள்ளனர்.

unknown node

ram saran and upasana [Image Source: Google ]இதையும் படியுங்களேன்-எனக்கு வரலட்சுமிக்கு காதலா..? முதல் முறையாக மனம் திறந்த விஷால்.!

அதன்படி, ராம் சரணின் மனைவி உபாசனா காமினேனி கர்ப்பமாக இருக்கிறாராம். இந்த சந்தோஷமான செய்தியை நடிகரும், ராம்சரணின் தந்தையுமான சிரஞ்சீவி தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை அவர்களுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

unknown node

ram sran and upsama [Image Source: Google ]

மேலும் நடிகர் ராம்சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள “RC15” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node