இன்று தங்கம் ,வெள்ளி விலை சரிந்தது !
சர்வதேச சந்தையில் சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்தும் ,குறைந்தும் காணப்படுகிறது .சென்னையில் நேற்று மாலை 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.24,304-க்கு விற்கப்பட்டது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 208 ரூபாய் வரை குறைந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,012 ஆகவும், சவரனுக்கு ரூ. 24,096-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தூய தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. சென்னையில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,163 ஆகவும், சவரனுக்கு ரூ.25,304-க்கும் விற்பனை செய்து வருகின்றனர்.
இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து 39.80 காசுகளாக விற்பனை செய்து வருகின்றனர்.