வீட்டில் இருந்தபடியே ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி?

பழகுநர் - ஓட்டுநர் உரிமம் : மக்களே RTO ஆபிஸுக்கு செல்லாமலே வீட்டிலிருந்தபடியே எப்படி லைசன்ஸுக்கான பழகுநர் உரிமம் (LLR) எப்படி பெறுவது என்று பார்க்கலாம் வாங்க...

llr - licence

பழகுநர் – ஓட்டுநர் உரிமம் :மக்களே RTO ஆபிஸுக்கு செல்லாமலே வீட்டிலிருந்தபடியே எப்படி லைசன்ஸுக்கான பழகுநர் உரிமம் (LLR) எப்படி பெறுவது என்று பார்க்கலாம் வாங்க…

நாடு முழுவதும் ஒவ்வொரு ஓட்டுனரும் தங்களுக்கென ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால், வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுகிறார்கள். 18 வயது பிறந்ததும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வயதை எட்டிவிட்டீர்கள் என்றே சொல்லலாம். ஆனால், நம்மில் பலரிடம் இங்கு ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருக்கும். இதனால், ஒவ்வொரு சிக்னல்களிலும் பயந்து கொண்டே பயணிக்க வேண்டியதாயிற்று.

இப்பவும் ஒன்னும் பிரச்சனை இல்லை, RTO ஆபிஸுக்கு அலையாமல், வீட்டில் இருந்தபடியே பழகுநர் – ஓட்டுநர் உரிமம் பெற முடியும். ஆம், அது எப்படி என்றால், ஆன்லைன் மூலமாக அதனை நாம் பெற முடியும். ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து டிரைவிங் லைசன்ஸ் எவ்வாறு பெறலாம் என்பதை பார்க்கலாம்.  ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு இரண்டு முறைகள் உள்ளது.

unknown node

அத்துப்படி, ஒன்று LLR மற்றொன்று Driving Test ஆகும், முதலில் LLR பெற்று கொண்டால், பின்னர் 3 மாத கால அவகாசத்திற்கு பின், Driving Test முடிந்தவுடன் நமக்கு லைசன்ஸ் (ஓட்டுநர் உரிமம்) கிடைத்து விடும். ஓட்டுனர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) பெறுவதற்கான முதற்படியே எல்எல்ஆர் என்று கூறப்படும் பழகுநர் உரிமம் பெறுவதுதான்.

பழகுநர் உரிமம் பெறுவதற்கு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமானhttps://parivahan.gov.in/parivahan/அல்லது தமிழ்நாடு போக்குவரத்துத் துறை இணையதளமானhttps://tnsta.gov.in/tnsta/homepageஎன்கிற இணையதளத்தில் நாம் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.

unknown node

தேவைப்படும் ஆவணங்கள் :

ரேஷன் கார்டு

பாஸ்போர்ட்

எல்ஐசி பாலிசி ரசீது

வாக்காளர் அடையாள அட்டை

மின்கட்டண ரசீது

குடிநீர் கட்டண ரசீது

சாதிச் சான்று மற்றும் வருமானச் சான்று

பள்ளிச் சான்று

பிறப்பு சான்று

பான் கார்டு

கட்டணம்

இருசக்கர வாகனம் அல்லது காருக்கு ஏதேனும் ஒன்றிக்கு ரூ.60 கட்டணமாகவும், இரண்டும் சேர்த்து எடுக்கும்போது ரூ.90 கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.

எவ்வாறு பெற முடிவு:

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் படிவங்களைசரியாக பூர்த்தி செய்யப்பட்டவுடன், விண்ணப்பதாரர் சமர்ப்பிக்கும் முன் தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து இணைக்க வேண்டும்.

இந்த இணையதளங்கள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

பணம் செலுத்திய பிறகு, விண்ணப்பதாரர் லெனர் உரிமத் தேர்வுக்காக RTO-ஐப் பார்வையிட தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தேர்வில் தேர்ச்சி பெற்றால், RTO உடனடியாக பழகுநர் உரிமத்தை வழங்கும்.

நீங்கள் RTO தேர்வுக்குசெல்லும் போது, Payment Receipt, pre Filled application, Acknowledgement Receipt ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும்.

உங்களுடைய Driving டெஸ்ட் முடிந்து 2 நாட்களில் உங்களுக்கான டிரைவிங் லைசன்ஸ் கிடைத்துவிடும்.