பழகுநர் – ஓட்டுநர் உரிமம் : மக்களே RTO ஆபிஸுக்கு செல்லாமலே வீட்டிலிருந்தபடியே எப்படி லைசன்ஸுக்கான பழகுநர் உரிமம் (LLR) எப்படி பெறுவது என்று பார்க்கலாம் வாங்க… நாடு முழுவதும் ஒவ்வொரு ஓட்டுனரும் தங்களுக்கென ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால், வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுகிறார்கள். 18 வயது பிறந்ததும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வயதை எட்டிவிட்டீர்கள் என்றே சொல்லலாம். ஆனால், நம்மில் பலரிடம் இங்கு ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருக்கும். இதனால், ஒவ்வொரு சிக்னல்களிலும் பயந்து கொண்டே பயணிக்க […]
சென்னை: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போதயை நடைமுறையின்படி, ஒரு தனிநபர் ஒட்டுநர் உரிமம் பெற வேண்டும் என்றால், அதற்கான சோதனைக்கு ஆர்டிஒ அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது. இந்த விதியை தற்போது மத்திய அரசு மாற்றி உள்ளது. அதாவது, தனியார் ஒட்டுநர் பயிற்சி மையங்களே சோதனை நடத்தி லைசன்ஸ் கொடுக்கலாம் என்றும், ஜூன் 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப […]
சென்னை : சென்னையில் செல்லப் பிராணிகள் வளர்க்க உரிமம் பெற 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராட்வெய்லர் இனத்தை சேர்ந்த இரண்டு நாய்கள் 5 வயது சிறுமியை கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதைப்போலவே, மற்ற மாவட்டங்களிலும் சென்னையில் உள்ள மற்ற பகுதிகளிலும் தெருவில் இருக்கும் நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் மனிதர்களை கடித்த சம்பவமும் தொடர்ச்சியாக நடைபெற்றது. இதனையடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் […]
கோவையை சேர்ந்த பிரபல யூடியூப் பிரபலம் டி.டி.எப் வாசன், இணையத்தில் விலையுயர்ந்த பைக்குகளில் சாகசம் செய்வது, வெளியூர் பயணங்கள் மேற்கொள்வது, அதிவேக பைக் பயணம் உள்ளிட்ட பல்வேறு விடீயோக்களை பதிவிட்டு லட்சக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்துள்ளார். இவர் நேற்று சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது, காஞ்சிபுரம் மாவட்டம் பாலுச்செட்டிசத்திரம் அருகே, தாமல் ஊர் பகுதி நெடுஞ்சாலையில் தனது பைக்கில் சாகசம் செய்ய முயற்சித்த போது, அப்போது நிலை தடுமாறி அருகில் உள்ள சாலையோர […]
செந்தில் – ராஜலட்சுமி ஆகிய இருவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சூப்பரான பாடல்களை படித்ததன் மூலம் பிரபலமானவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து சினிமாவில் பாடிய முதல் பாடலான “சின்ன மச்சான்” பாடல் மக்களை வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம். தேன் குரலை கொண்ட இவர்களுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இதில் ராஜலட்சுமி கடைசியாக புஷ்பா படத்தில் இடம் பெற்றிருந்த “சாமி என் சாமி” பாடலை பாடியது பட்டி தொட்டி எங்கும் அவரை பிரபலமாக்கியது […]
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர்கள் செந்தில் – ராஜலட்சுமி. இவர்கள் இருவரும் இணைந்து பாடிய ‘சின்ன மச்சான்’ பாடல் மக்களை வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம். தேன் குரலை கொண்ட இவர்களுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. ராஜலட்சுமி புஷ்பா படத்தில் இடம் பெற்றிருந்த “சாமி என் சாமி” பாடலை பாடியது பட்டி தொட்டி எங்கும் அவரை பிரபலமாக்கியது என்று கூறலாம். இன்னும் வரை அந்த பாடலை பலரும் கேட்டு […]
இந்தியாவில் முதன் முறையாக ஓட்டுநர் உரிமம் பெற்று 3 அடி கொண்ட மாற்றுத்திறனாளி சாதனை படைத்துள்ளார். இரண்டு கை மற்றும் கால்கள் நலமுடன் இருக்கும் மனிதர்களே வாழ்வில் சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் வாழ்ந்து வரும் நிலையில், தங்களுக்கு உடலளவில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலும் அதை தங்கள் நிறைகளாக எடுத்துக் கொண்டு சாதனை படைத்து வரக்கூடிய மாற்று திறனாளிகளை நிச்சயம் நாம் பாராட்டியாக வேண்டும். அந்த வகையில் ஹைதராபாத்தில் வசித்து வரக்கூடிய ஷிவ்பால் எனும் […]
ஆவின் பாலகத்தில் வேறு பொருட்கள் விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஈரோடு அருகேயுள்ள சித்தோடு ஆவின் பால் பண்ணையில்,தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று ஆய்வு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர் கூறியதாவது: “கொரோனோ காலத்தில் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் முறையாக மக்களிடம் சென்றடைகிறதா?,என்பது குறித்து முதல்வர் உத்தரவின் பேரில் ஆய்வு செய்து வருகிறோம். கொரோனோ காலம் என்பதால் விவசாயிகளுக்கு பால் நிலுவைத்தொகை உள்ளது, […]
சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிவந்தால் வாகனங்களின் அனுமதி சீட்டை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து துறையின் கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி பொதுக்கூட்டத்திற்கோ அல்லது தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கோ பொதுமக்களை அழைத்துவர, அனுமதிக்கப்பட்ட பயணிகள் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாறாக சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிவந்தால் கீழ்கண்ட நடவடிக்கைகள் வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது போக்குவரத்து துறை மற்றும் காவல் துறை மூலம் […]
4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம். இன்று பலரும் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது, தலைக்கவசம் அணிவதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதே இல்லை. இந்த அலட்சியம் தான், ஒரு கட்டத்தில் பெரிய அளவிலான ஆபத்துகளை சந்திக்க வைக்கிறது. இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில், 4 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்றால், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால், மத்திய மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுத்து வருகிறது. அதன்படி வரைஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், மக்கள் யாரும் வேலைக்கு செல்ல இயலாததால் வீட்டிலேயே முடக்கப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசு பல்வேறு சிறப்பு சலுகைகள் அறிவித்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு […]
சென்னையில் வாகனம் ஓட்டுவதற்கு பயிற்சி எடுத்த இளம்பெண் ஒருவர், தனது ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், அந்த பெண் லைசென்ஸ் பெறுவதற்காக ஆர்.டி.ஓ அலுவலகதிற்கு வந்தார். ஆனால், ஆர்.டி.ஓ லைசென்ஸ் தர மறுத்துவிட்டார். அதற்க்கு காரணம், அவர் அணிந்த உடை. ஐ.டி துறையினர் பணியாற்றும் அந்த பெண், எப்பொழுதும் மார்டன் உடை அணிந்து வருவார். மேலும், சம்பவம் நடந்த அன்று அவர் பேண்ட், டீ-ஷர்ட் அணிந்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. லைசன்ஸுக்கான டெஸ்ட் டிரைவ் […]
நடிகை அனுஸ்கா சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்கள் பல நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது இவர், லைசன்ஸ் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிகை அனுஸ்கா காத்து கேளாத மற்றும் வாய் பேச முடியாத பெண் தொழிலதிபராக நடிக்கிறார். இப்படம் குறித்து அனுஸ்கா கூறுகையில், வாலி படத்தில் அஜித் நடித்த அதே கதாபாத்திரத்தில் […]
பெண்கள் பாதுகாப்பிற்கு துப்பாக்கி வைத்து கொள்ள உரிமம் வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் தாங்கள் மிகுந்த அச்சமடைந்து இருப்பதாகவும் கூறினார். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை. கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகளாக 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் […]
மகளிர் விடுதிகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம், ஜனவரி 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சமீபத்தில், பெண்கள் விடுதியில் கேமரா வைத்து, அங்கு தங்கி இருந்த பெண்களை தவறாக வீடியோ எடுத்த விடுதியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அந்த விடுதி, உரிமம் இல்லாமல் இயங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, நகரில் இயங்கிவரும் பெண்கள் விடுதிகளை, முறையாக பதிவு செய்ய டிசம்பர் 31-ம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் அவகாசம் […]
தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் தொடர்பான அனைத்துப் பணிகளுக்கான கட்டணத்தையும் ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி வரும் அக்டோபர் 1முதல் நடைமுறைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வரும் 1 ஆம் தேதி முதல் ஓட்டுநர் உரிமம் தொடர்பான அனைத்துப் பணிகளுக்கான கட்டணத்தையும் இனி ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி தொடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும்https://parivahan.gov.in/parivahan/ என்கிற இணையத்தளத்தில் ஓட்டுநர் உரிமம் வேண்டியவர்கள் விண்ணப்பித்துக் கட்டணத்தை வங்கி இணைய சேவை, டெபிட் கார்டு […]