டாடா-வின் Punch.EV.! ரூ.21,000 முன்பணம் போதும்.! ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கி.மீ பயணம்.!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகன சந்தையிலும் பலமாக கால்பதித்து உள்ளது. டாடா மோட்டார்ஸ் எலெக்ட்ரிக் வாகனமான பன்ச் EV-ஐ அறிமுகபடுத்திய பின்னர் இந்திய மின்சார கார் சந்தையில் டாடா மோட்டார்ஸின் நிலை தற்போது வலுவாகியுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களின் இந்திய பங்குசந்தையில் 85 சதவீத சந்தை பங்கை டாடா நிறுவனம் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விலை :
டாடா பன்ச் (Tata Punch.ev) எலெக்ட்ரிக் கார் வேரியண்ட் மற்றும் வசதிகள் கொண்டு 12 லட்சம் முதல் 14 லட்சம் வரையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது பன்ச் EV-ஐ 21,000 ரூபாய் கொடுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் டாடா பன்ச் சந்தைக்கு கொண்டுவரப்பட உள்ளது.
OPPO Reno 11 சீரியஸ்… மீடியாடெக் டைமன்சிட்டி சிப்களுடன் இந்தியாவில் அறிமுகம்!
கலர் & வேரியண்ட் :
வெள்ளை, கிரே (Grey) , சிவப்பு மற்றும் வான நீலம் ஆகிய கலர்களில் இந்த வாகனம் விற்பனைக்கு வரவுள்ளது. பன்ச் ev (punch ev), பன்ச் ev (Punch ev long range) லாங் ரேஞ்ச், ஆகிய வேரியண்ட் கீழே ஸ்மார்ட், ஸ்மார்ட் + , அட்வான்ஸ், அட்வான்ஸ் + என்றும், பன்ச் ev லாங் ரேஞ்ச் (Punch EV Long Range) வேரியண்ட் ஆனது அட்வென்ஞ்சர் (Adventure), எம்பவர் (Empower) , எம்பவர் + (Empower +) ஆகிய வேரியண்ட்களில் டாடா எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது.
சிறப்பம்சங்கள் :
பஞ்ச் EV காரில் ரேடியேட்டர் கிரில்லின் தேவை இல்லை. பகல்நேரத்தில் விளக்குகளில் செயல்திறன் குறைவாக இருக்கும். LED லைட் பார், காரின் அகலத்தின் அளவுக்கு பானட்டின் விளிம்பு வரையில் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹெட்லேம்ப் வடிவமைப்பானது பஞ்ச் EVஐ மற்ற மாடலில் இருந்து வேறுபட்டுள்ளன.
மேலும், 5G இணைப்பு மற்றும் காரின் இருவழி சார்ஜிங் வசதி உள்ளது. இதன் மூலம் மற்ற சாதனங்களுக்கும் சார்ஜ் செய்து கொள்ளலாம். கூடுதலாக, பஞ்ச் EV ஆனது ஓவர்-தி-ஏர் (OTA) மென்பொருள் புதுப்பிப்புகள் மற்றும் அம்ச கிளவுட் இணைப்பு ஆகியவற்றை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பவர் :
Tata Punch EV ஆனது ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 300 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும்படி அமைந்துள்ளது. இருப்பினும், அதன் சக்தி, வேகம் பொறுத்து இந்த தூர கணக்கீடு மாறுபடும். எஸ்யூவியில் 3.3 கிலோவாட் வால் பாக்ஸ் சார்ஜர் பொருத்தப்பட்டிருக்கும், மேலும் நீண்ட தூர மாறுபாட்டுடன் 7.2 கிலோவாட் வேகமான ஹோம் சார்ஜரும் இதில் இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு.
லேட்டஸ்ட் செய்திகள்
“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!
February 27, 2025
“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
February 27, 2025
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025