அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Rain in tamilnadu

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் பருவமழை தொடங்கிய நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்த 7 இலங்கை தமிழர்கள்..!

தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றின் வேகம் மணிக்கு 45-55 கிமீ  வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் மலாக்கா பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  உருவாகியுள்ளது.  இது 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என இநித்யா வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்