தேசிய கொடியை வைத்து ஸ்கூட்டியை சுத்தம் செய்த நபர்! வைரலாகும் வீடியோ

தேசியக் கொடியை வைத்து ஒருவர் தனது ஸ்கூட்டியை சுத்தம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தேசியக் கொடியை வைத்து ஒருவர் தனது ஸ்கூட்டியை சுத்தம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லியில் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில், 52 வயது முதியவர் தனது இரு சக்கர வாகனத்தை சுத்தம் செய்ய தேசியக் கொடியைப் பயன்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், அந்த நபர் தனது வெள்ளை நிற ஸ்கூட்டரை தேசிய கொடியால் சுத்தம் செய்து தூசி துடைப்பது பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, “அந்த நபரின் மீது 1971 தேசிய மரியாதையை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டம் பிரிவு 2 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக” அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

unknown node