ஆப்பிள் வெளியிட்டுள்ள ஐபோன் 14க்காக இரண்டு கிட்னியையும் விற்கவேண்டும் என நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.
ஆப்பிள் அதன் புதிய மாடல் ஐபோன், வாட்ச் மற்றும் ஏர்போட்களை புதன்கிழமை(செப் 7) அன்று பிரமாண்டமாக வெளியிட்டது. மேலும் ஐபோன் 14 ப்ரோ விலை ரூ.1,29,900 மற்றும் ஐபோன்14 ப்ரோ மேக்ஸ் விலை ரூ.1,39,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நெட்டிசன்கள், முன்னதாக வெளியிடப்பட்ட ஐபோன் 13-வுடன் ஐபோன் 14-ஐ கம்பர் செய்து எந்த ஒரு மாற்றமும் இல்லை அனால் விலை மட்டும் அதிகரித்துள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் சில நெட்டிசன்கள் ஐபோன் 14-ன் விலை குறித்து மோசமாக கேலி செய்து வரும் நிலையில், இதனை வாங்குவதற்காக தமது இரண்டு கிட்னியையும் விற்க தான் வேண்டும் என கலாய்த்து வருகின்றனர்.
unknown nodeunknown nodeunknown node