#Breaking: பெண்களிடம் ஆபாசமாக பேசிய,யூ-டியூபர் மதன் கைது...!

YouTuber Madan is currently being held by police

பெண்களிடம் ஆபாசமாக பேசிய மற்றும் பணமோசடி புகாரில் தேடப்பட்டு வந்த,யூ-டியூபர் மதன்,தற்போது தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யூ-டியூபர் மதன் பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் வீடியோ கேம்களை லைவ்வாக விளையாடி யூ-டியூபில் பதிவேற்றம் செய்து வந்தார். யூ-டியூபர் மதன் ஆன்லைன் கேம் விளையாட்டின்போது பெண்களை ஆபாசமாகப் பேசி பல வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதனையடுத்து,யூ-டியூபர் மதன் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.இந்த புகார் தொடர்பாக மதனை விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், மதன் விசாரணைக்கு ஆஜரகாமல் தலைமறைவாக உள்ளார். இதைத்தொடர்ந்து, யூ டியூபர் பப்ஜி மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,யூ-டியூப்பர் மதனின் மனைவி, தந்தையிடம் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். மதன் யூ-டியூப் சேனலின் நிர்வாகியாக மதன் மனைவி கிருத்திகா இருந்ததால் கிருத்திகா கைது  செய்யப்பட்டு வரும் 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் உள்ளார்.

இதனைத் தொடர்ந்து,யூடியூபர் மதன் சென்னை உயர்நீதிமன்றத்தில்,முன்- ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவானது, நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி யூடியூபர் மதனின் பேச்சுகள் கேட்க முடியாத அளவிற்கு மோசமாக இருப்பதாக உள்ளது. மதன் வீடியோ பதிவுகளை கேட்டுவிட்டு வந்து வாதிடும்படி ஜாமீன் வழக்கில் ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிபதி தெரிவித்தார்.மேலும் வழக்கை,நீதிபதி இன்று  ஒத்திவைத்தார்.

இந்நிலையில்,பெண்களிடம் ஆபாசமாக பேசிய மற்றும் பணமோசடி புகாரில் தேடப்பட்டு வந்த,யூ-டியூபர் மதன்,தருமபுரியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த போது,தனிப்படை போலீசாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்,மதனை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தும் முயற்சியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.