தன் உலக சாதனையை தானே முறியடித்து..!தங்கம் வென்ற தன்னிகர் இல்லா வீரர்

உலக துப்பாக்கி சுடும் போட்டி ஜெர்மனி உள்ள முனிச்சில் நடந்து வருகிறது.இதில் இந்தியாவை சேர்ந்த 17 வயதே ஆன சவுரவ் சவுத்ரி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

உலக துப்பாக்கி சுடும் போட்டி ஜெர்மனி உள்ள முனிச்சில் நடந்து வருகிறது.இதில் இந்தியாவை சேர்ந்த 17 வயதே ஆன சவுரவ் சவுத்ரி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

unknown node

இன்று நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் போட்டியில் இந்தியா சார்பில் 17 வயது நிரம்பிய சவுரவ் கலந்து கொண்டார்.அதில் அவர் 246.3 புள்ளிகள் எடுத்தார். இதற்கு முன் 245 புள்ளிகள் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது இந்த சாதனையை இவர் தான் படைத்தார்.இந்நிலையில் தற்போது  246.3 புள்ளிகள் எடுத்து தன்னுடைய சாதனையை தானே முறியடித்து தங்கத்தை தன் வசம் படுத்தினார்.

unknown node

மேலும் இவர் கடந்த ஆண்டு நடந்த ஆசிய போட்டி மற்றும் யூத் ஒலிம்பிக்   போட்டியிலும் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.