ஃப்ரூட் சாலட் vs முழுப்பழம் – இவற்றில் எதை சாப்பிடுவது நல்லது?

This article gives information about fruits vs fruits salad which is good for health in tamil. It contains information about fruits vs fruits salad ethai sappiduvathu nallathu.

வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த நவ நாகரீக வாழ்க்கையில், நம்மை நாம் கவனித்துக் கொள்ள கூட நேரம் இன்றி அன்றாட தேவைகள் அனைத்தையும் அதிவிரைவில் பெற விழைகிறோம். வேகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல நவ நாகரீகத்திற்கும் நாம் கொடுக்கும் மதிப்பு என்பது மிக முக்கியமானதாக விளங்குகிறது.

சாப்பிடும் சாப்பாட்டைஃபாஸ்ட் ஃபுட்என்று மாற்றி விரைந்து நகர்ந்து கொண்டிருக்கும் நாம், ஆரோக்கியம் எதில் உள்ளது என்பதையே மறக்கடிக்கப்பட்டு இருக்கிறோம்; மறந்தும் உள்ளோம். உணவு முறையில் வேகம் தனது வித்தையை காட்டி நம்மை ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடும் ஃபாரின் நபராக மாற்றியது என்றால், நாம் கடைபிடிக்கும் நவ நாகரீகமோ சத்துக்கள் அளிக்கும் பழங்கள் மற்றும் காய்களை முழுதாக உண்பதை விடுத்து – காய்-பழ வகைகளை நறுக்கி, அதன் மீது எதை எதையோ தூவிசாலட்என்ற முறையில் நம்மை உட்கொள்ள செய்துள்ளது.

unknown node

உண்மையில், ஃப்ரூட் சாலட் மற்றும் முழுப்பழம் – இவ்விரண்டில் எது நல்லது என்று உணராமல் கடைபிடித்துக் கொண்டிருக்கும் மக்களை விழிப்படையச் செய்யவே இந்த பதிப்பு..!

உண்மை என்ன?

பல பழங்களை நறுக்கி ஒன்றாக உண்டால் உடலுக்கு அதிக சக்தியும், சத்துக்களும் கிடைக்கிறது என்ற குருட்டு நம்பிக்கையில் தான் பலர் ஃப்ரூட் சாலட்டை விரும்பி உண்கின்றனர்; மேலும் பழங்களை கடித்து உண்பதை விட, இவ்வாறு நறுக்கி கரண்டியால் குத்தி உண்பது தான் நாகரீகம் என்றும் பலர் எண்ணுகின்றனர்.

unknown node

ஆனால், உண்மை என்ன தெரியுமா? ஒரே நேரத்தில் பலவிதமான பழங்களை உட்கொண்டால், உடல் உறுப்புகளால் அத்தனை வேறுபட்ட சத்துக்களையும் பழங்களில் இருந்து உறிஞ்ச இயலாமல், பல சத்துக்கள் வீணாகின்றன. மேலும் இவ்வாறு பலதரப்பட்ட பழங்களை செரிப்பதிலும் உடல் உறுப்புகள் சற்று தடுமாறுகின்றன.

முழுப்பழம் முக்கியம்..!

unknown node

ஆகவே பழங்களை உண்ணும் பொழுது முழுப்பழங்களாக உண்ண முயலுங்கள்; உணவு எடுத்துக் கொண்ட பின் அரைமணி நேரம் கழித்து அல்லது நொறுக்குத்தீனிகளுக்கான இடைவேளைகளில் பழங்களை முழுமையானதாக உண்ண வேண்டியது அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

முக்கிய குறிப்புகள்..!

unknown node

பழங்களை நறுக்கி அதிக நேரம் வைத்திருந்தால், அதிலுள்ள சத்துக்கள் நீங்கி தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் படையெடுக்க ஆரம்பித்து விடும்; ஆகையால், பழங்களை நறுக்கி அவ்வப்போது உண்ணுதல் அவசியம்.

மேலும் பழங்களை விற்கும் பழக்கடை சூரிய ஒளி நேராக படும்படி இல்லாத இடத்தில் இருந்து பழங்களை வாங்கி பயன்படுத்தவும். அதாவது பழங்களின் மீது நேரடி சூரிய ஒளி படுதல் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம்; ஆகையால் இதில் கவனம் அவசியம்..!

unknown node

சாப்பாட்டில் தான்ஃபாஸ்ட் ஃபுட்முறைக்கு அடிமையான நம் மனது, ஆரோக்கியமான உணவுகளை ஏற்க மறுக்கிறது. குறைந்தபட்சம் காய்-பழங்கள் பற்றிய உண்மையை அறிந்து, அவற்றின் மூலமாவது உடலுக்கான ஆரோக்கியத்தை அளிக்க முயல்வோம்..! பதிப்பு பயனுள்ளது என்று கருதினால், மற்றவர்களும் படித்து பயனடைய பகிரவும்..!