கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சொற்ப ரன்னில் அவுட்! மனமுடைந்த ரசிகர் தற்கொலை....

பாபுலால் பாரியா என்ற  63 வயது முதியவர் மத்திய பிரதேஷத்தில் உலா   ரட்லாம் பகுதியின் அம்பேத்கர்நகரில் வசித்து வருபவர், இவர் விராட் கோலியின் தீவிர ரசிகர் என்று

பாபுலால் பாரியா என்ற  63 வயது முதியவர் மத்திய பிரதேஷத்தில் உலா   ரட்லாம் பகுதியின் அம்பேத்கர்நகரில் வசித்து வருபவர், இவர் விராட் கோலியின் தீவிர ரசிகர் என்று தெரிகிறது.

கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததையடுத்து விரக்தியில் மண்ணெண்ணெயை தன் மேல் ஊற்றி கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக தீக்காயங்களுடன் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி செவ்வாய் கிழமை காலை அவர் உயிர் பிரிந்தது.இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேசிய அசிஸ்டண்ட் சப் இன்ஸ்பெக்டர் பியார்சிங் அலாவே, “பாரியா ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஆவார். போட்டியைப் பார்க்கும் போது அவர் மது போதையில் இருந்ததாகத் தெரிகிறது. கோலி அவுட் ஆன பிறகு தீக்குளித்துள்ளார், முதற்கட்ட விசாரணையில் தற்கொலைக்கு இதுதான் காரணம் என்று தெரிகிறது. அவர் தனது மரண வாக்குமூலத்தில் கோலி அவுட் ஆனதால் விரக்தியில் மனமுடைந்ததாகத் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினரும் அவர் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர் என்று கூறியுள்ளனர்.” என்றார்.நேற்று  காலை 7.30 மணியளவில் பரியா மரணமடைந்தார். போலீஸார் வழக்கு தொடர்ந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.source:www.dinasuvadu.com