டெஸ்ட் தொடருக்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் கேப் டவுனில் மழை காரணமாக உள் அரங்க பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இதற்கிடையே, வி அன்டு ஏ பீச் பகுதியில் இசை வாசிக்கப்படும் இடத்துக்குச் சென்ற ஷிகர் தவானும், விராட் கோலியும் இணைந்து நடனமாடினர். ஷிகர் தவானின் மகன் இடை, இடையே வந்து தமது தந்தையை அழைத்துச் செல்ல முயன்றார். இருப்பினும் அந்த இசைக்கு பாங்கரா நடனமாடலாம் என விராட் கோலி யோசனை தெரிவித்ததையடுத்து அவர்கள் இருவரும் சேர்ந்து நடன அசைவுகளை வெளிப்படுத்தினர்.
கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலியும், ஷிகர் தவானும் தென் ஆப்பிரிக்காவில் பாங்க்ரா நடனமாடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
source:www.dinasuvadu.com