ஒவ்வொரு ஆண்டும் உலகின் அழகான மனிதருக்கான டாப்10 பட்டியலை Worldstopmost.com என்ற இணையதளம் வெளியிட்டு வருகிறது.
unknown nodeஇந்த ஆண்டுக்கான உலகின் அழகான மனிதர்கள் பட்டியலை தற்போது அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது.
unknown nodeTroy, Mr and Mrs Smith, World War Z உள்ளிட்ட படங்களில் நடித்த பிராட் பிட், Harry Potter படங்களில் நடித்துள்ள ராபர்ட் பேடிண்சன், டாம் க்ரூஸ் ஆகிய உள்ளிட்ட ஹாலிவுட்டின் முன்னணி கதாநாயகர்கள், இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் Godfrey Gao, Omar Borkan Al Gala போன்ற இதர மொழி முன்னணி கதாநாயகர்களையும், சக ஹிந்தி நடிகரான சல்மான் கான் உள்ளிட்டவர்களையும் பின்னுக்குத்தள்ளி பாலிவுட் நடிகர் ஹிர்திக் ரோஷன் இப்பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார்.இதே இணையதளம் 2016ல் வெளியிட்ட உலகின் அழகான மனிதர்கள் பட்டியலில் 3ஆம் இடம் பிடித்திருந்த ஹிர்திக் ரோஷன் இந்த ஆண்டு முதல் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2018-ன் உலகின் அழகான மனிதர்கள் பட்டியல்:
1. ஹிர்திக் ரோஷன் (Hrithik Roshan)
2. பிராட் பிட் (Brad Pitt)
3. காட்ஃபிரே காவ் (Godfrey Gao)
4. ராபர்ட் பேடிண்சன் (Robert Pattinson)
5. டென்சல் வாஷிங்டன் (Denzel Washington)
6. ஓமர் போர்கான் அல் காலா ( Omar Borkan Al Gala)
7. சல்மான் கான் (Salman Khan)
8. நோஹ் மில்ஸ் (Noah Mills)
9. டாம் க்ரூஸ் (Tom Cruise)
10. இளவரசர் வில்லியம் (Prince William)