எப்.16 போர் விமானத்தின் ஒப்பந்தத்தை வெளிப்படையாகக் கூறக்கூடாது என கூறிய அமெரிக்கா துணை செய்தி தொடர்பாளர்!!!

This news gives information aboutThe US deputy spokesperson said that the F16 aircraft should not be explicitly stated f16

எப்.16 போர் விமானம் மற்றும் AMRAAM ஏவுகணை பாகிஸ்தான் பயன்படுத்தி உள்ளது என கூறினார்.

பாகிஸ்தான் தற்போது ஒப்பந்த விதிகளை மீறி  எப்16- ரக போர் விமானத்தை பயன்படுத்தி உள்ளது என இந்தியா குற்றம் சாட்டியது

காஷ்மீரில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் பல பயங்கரவாதிகள் இறந்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து  இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் ராணுவத்தினரை இந்தியா ராணுவத்தினர்  விரட்டிய அடித்தனர்.அப்போது பாகிஸ்தான் விமானம் ஓன்று  தாக்கப்பட்டது .

அந்த விமானத்தின் பாகங்களை ஆய்வு செய்த இந்திய ராணுவம்  தாக்குதலுக்கு  எப்.16 போர் விமானம் மற்றும் AMRAAM ஏவுகணை பாகிஸ்தான் பயன்படுத்தி உள்ளது என கூறினார்.

ஆனால் பாகிஸ்தான் இதனை மறுத்து வருகின்றனர். தாக்கப்பட்ட விமானத்தின் பாகங்களில் உள்ள வரிசை எண், குறியீடு உள்ளிட்ட சில ஆதாரங்களை வைத்து இந்த விமானம் எப்.16 ரக போர் விமானம் என  இந்தியா உறுதி செய்துள்ளது.

பயங்கராவதிகளுக்கு எதிராக மட்டும் பயன்படுத்த வேண்டும். மற்ற நாடுகள் மீது  தாக்குதல் நடத்த பயன்படுத்தக்கூடாது என்ற ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கிய விமானம் தான்  எப்16  ரக போர் விமானம்.

பாகிஸ்தான் தற்போது ஒப்பந்த விதிகளை மீறி  எப்16- ரக போர் விமானத்தை பயன்படுத்தி உள்ளது என இந்தியா குற்றம் சாட்டியது.

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் ராபர்ட் பல்லடினோ இந்த தகவலை நாங்கள் பார்த்தோம் மேலும் இந்த விவகாரத்தை உன்னிப்பாக பின்பற்றி வருகிறோம் என்றார்.

எப்.16 போர் விமானம்  ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறி விட்டதா  என கேள்வி கேட்டபோது  அதற்க்கு பதிலளித்த ராபர்ட் பல்லடினோ நான் எதையும் உறுதி செய்ய முடியாது.

ஆனால் கொள்கைகளின் அடிப்படையில் இருதரப்புக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை நான் வெளிப்படையாகக் கூறக்கூடாது என கூறினார் ராபர்ட் பல்லடினோ.