அமெரிக்காவில் தமிழகத்தை சேர்ந்தவர் குடும்பத்துடன் கைது...!!

6 மாத குழந்தைக்கு உயர்தர சிகிச்சை கிடைப்பதை தடுத்ததாக  அமெரிக்காவில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

6 மாத குழந்தைக்கு உயர்தர சிகிச்சை கிடைப்பதை தடுத்ததாக  அமெரிக்காவில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரகாஷ் என்ற மென்பொறியாளர், மனைவி மாலாவுடன் ((Prakash Settu – Mala )) புளோரிடாவில் வசிக்கிறார்.இவர்களது இரட்டைக் குழந்தைகளில் ஒன்றான ஹிமிஷாவுக்கு ((Himisha)) இடது கை வீக்கத்துக்கான சிகிச்சைக்காக ப்ரோவர்டு கௌண்டியில் ((Broward County )) உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

unknown node

அவர்கள் பரிந்துரைக்கப்பட்ட உயர்தர பரிசோதனைக்கு பணம் இல்லாததால், வேறு மருத்துவமனைக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.

ஆனால், குழந்தைக்கு உயர்தர சிகிச்சை கிடைப்பதை தடுத்ததாக மருத்துவமனை நிர்வாகம், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு புகார் அளித்தது. இதையடுத்து பிரகாஷ் – மாலா தம்பதி கைது செய்யப் பட்டனர். மேலும் அவர்களின் குழந்தைகளையும் அதிகாரிகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

பிணையில் வெளிவந்த தம்பதியிடம் குழந்தைகள் ஒப்படைக்கப் படவில்லை. இதனால் செய்வது அறியாமல் தமிழகத்தை சேர்ந்த தம்பதி அமெரிக்காவில் தவித்து வருகின்றனர்.

DINASUVADU