ஆப்கானில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்...பலி எண்ணிக்கை 65ஆக அதிகரிப்பு...!!

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65ஆக அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65ஆக அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் மக்கள் மீதும் , அரசின் ராணுவ மற்றும் பாதுகாப்பு படைவீரர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்த சண்டையானது காலகாலமாக நடந்து வருகின்றது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் வார்டாக் மாகாணத்தில் இருக்கும் ராணுவ தளம் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டை வெடிக்க செய்தனர்.மற்றும் அங்கே இருக்கும் ராணுவ தளத்தின் மீதும் , போலீஸ் பயிற்சி மையத்தின் மீதும் தீடிர் துப்பாக்கி சூடு நடத்தினர்

இந்த கொடூர தாக்குதலில் பலர் கொல்லப்பட்டு சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் இந்த கொடூர சம்பவத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்களும் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது