ரஷ்யா நாட்டில் வேலையில்லாமல் தவிக்கும் பெரும்பாலானோர் தேனி வளர்ப்பு மூலமாக நல்ல வருமானத்தை எட்டி வருகின்றனர்.
ரஷ்யா நாட்டின் மாலிதாரஸ் கிராமத்தில் வசித்த பெரும்பாலோனோர் நகரங்களில் வேலை தேடி சென்றதால் மீதமிருந்த மக்கள் வேலை இன்றி தவித்து வந்தனர். இந்நிலையில் மாஸ்கோ நகரில் வசித்து வந்த , Guzel Sanzhapova என்ற பாட்டி சொந்த ஊரான மாலிதாரசுக்கு வந்து தேனி வளர்த்து வருகின்றார்.
தேனி வளர்ப்போடு இல்லாமல் தேன் சேகரிப்பது , தேனில் பழங்களை ஊற வைத்து பதப்படுத்துவது, மூலிகை கலந்த தேன் தயார் செய்வது என பல்வேறு பரிணாமத்தில் தேன் உற்பத்தி செய்து கிராமத்து முதியவர்களுக்கு வேலையும் கொடுத்துவருகின்றார்.தேன் உற்பத்தி செய்து அந்த பாட்டி ஆண்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு சம்பாதித்து வருகின்றார்.