புதுதில்லி :ஆயிரக்கணக்கான கோடி கடனில் தவித்து வரும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட தலைவர்களின் போக்குவரத்து செலவாக மத்திய அரசு சுமார் 1,146 கோடி ரூபாய் கட்டண தவணை பாக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.இதில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் 211 கோடி ரூபாயும், மத்திய அமைச்சரவை செயலாளர் மற்றும் பிரதமர் அலுவலகம் 543 கோடி ரூபாயும், வெளியுறவுத்துறை அமைச்சகம் 392 கோடி ரூபாயும் கட்டண நிலுவை வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ கமோடோர் லோகேஷ் பத்ரா தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்வியின் மூலம் ஏர் இந்தியா நிறுவனம் இத்தகவல்களை அளித்துள்ளது.
DINASUVADU