தமிழக மாணவர்களுக்கு NEET தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி மனித சங்கிலி போராட்டம்..!

தூத்துக்குடி: தமிழக மாணவர்களுக்கு NEET தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி இன்று மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டத்தை திமுக,காங்கிரஸ்,மார்க்சிஸ்ட்

unknown node

தூத்துக்குடி: தமிழக மாணவர்களுக்கு NEET தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி இன்று மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டத்தை திமுக,காங்கிரஸ்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ,திராவிடர் கழகம்,விடுதலை சிறுத்தைகள் கட்சி,ஆதிதமிழர் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய எதிர்க்கட்சிகள் முன்நின்று நடத்தின.

unknown node

தூத்துக்குடியில் இப்போராட்டமானது திமுக சட்டமன்ற உறுப்பினர் திருமதி.கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது.மேலும் இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ஜூனன்,மாநகர செயலாளர் ராஜா,புறநகர் செயலாளர் பேச்சிமுத்து,விளாத்திகுளம் செயலாளர் புவிராஜ்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அழகு முத்துபாண்டியன் மேலும் மற்ற கட்சிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கம்(SFI) போன்ற மாணவர் அமைப்புகள் உட்பட சுமார் 1500 கலந்துகொண்டனர்.

unknown node