உலக பணக்காரர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி கடந்த ஆண்டை விட 6 இடங்கள் உயர்ந்து சாதனை !!!

This news gives information aboutMukesh Ambani is among the richest men in the world with 6 places higher than last year-ulaka

தற்போது முகேஷ் அம்பானி சுமார் சொத்து மதிப்பு ரூ.3.53 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது.

106 இந்திய பணக்காரர்களில்முகேஷ் அம்பானி  முதலிடம் பிடித்துள்ளார்.

போர்ப்ஸ் இதழ் ஆண்டு தோறும் உலகப் பணக்காரர்களின்  பட்டியலை வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி 13-வது இடத்துக்கு முன்னெறி உள்ளார்.

பில்கேட்ஸ் மற்றும் வாரன் பபேட்டை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தில் தொடர்ந்து  அமேசானின் நிறுவனர் பெசோஸ் உள்ளார்.

இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.9.24 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.இந்நிலையில் 2018-ம் ஆண்டு முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.2.83 லட்சம் கோடியாக இருந்தது.

தற்போது முகேஷ் அம்பானி சுமார் சொத்து மதிப்பு ரூ.3.53 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது.இதன் மூலம் 19-வது இடத்தில் இருந்து 13-வது இடத்திற்க்கு முன்னேறி உள்ளார்.

106 இந்திய பணக்காரர்களில்முகேஷ் அம்பானி  முதலிடம் பிடித்துள்ளார்.மேலும் முகேஷ் அம்பானியின் சகோதரரும் ஆர்.காம் நிறுவனத்தின் தலைவருமான அனில் அம்பானி 1349-ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.