ஈராக் படகு விபத்தில் பெண்கள் ,குழந்தை உட்பட 100 பேர் பலி

this news gives information about More than 100 people, including women and children, were killed in an Iraqi boat accident-iraqi padaku vipathil

தகவல் அறிந்து மீட்பு படகுகள் வருவதற்குள் பெண்கள், குழந்தைகள் என 40 பேர்  இறந்தனர்.

100-க்கும்  மேற்பட்டோர் நீரில் மூழ்கி காணவில்லை அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈராக் நாட்டில் மொசூல் நகரில் நவுரூஸ் என்று அழைக்கப்படும் குர்து புத்தாண்டை கொண்டாட கடந்த 21-ம் தேதி பெரிய படகு மூலம்  டிக்ரிஸ் ஆற்றில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஆற்றில் நீரின் ஓட்டம் அதிகமாக  இருந்தது , யாரும் எதிர்பாராத நேரத்தில் படகு திடீரென தலைகீழாக கவிழ்ந்தது. படகில் பயணம் செய்த அனைவரும் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர்.

ஆற்றில் நீரின் ஓட்டம் அதிகமாக இருந்ததால் பலர் ஆற்றில் அடித்துச் சென்றனர். தகவல் அறிந்து மீட்பு படகுகள் வருவதற்குள் பெண்கள், குழந்தைகள் என 40 பேர்  இறந்தனர். 100-க்கும்  மேற்பட்டோர் நீரில் மூழ்கி காணவில்லை அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் 60 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். அதே நேரத்தில் 55 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.மீட்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.