பலமுறை தற்கொலை முயற்சி செய்த மைக்கல் ஜாக்சன் மகள் !!!

This news gives information about Michael Jackson's daughter who has attempted suicide many times-pala murai tharkolai seithathaka

கடந்த 2013-ம் ஆண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதில் உயிர் பிழைத்த பிறகு பத்திரிகை ஒன்றுக்கு  பேட்டி அளித்த பாரிஸ் ஜாக்சன்  தான் இதற்கு முன்பு  பலமுறை தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் கூறியுள்ளார்.

“லீவிங் நெவர்லேண்ட்” என்ற  ஆவணப்படத்தில் மைக்கேல் ஜாக்சன் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

பாப் பாடல் உலகின் மன்னரான வலம் வந்தார் மைக்கேல் ஜாக்சன்.இவர் கடந்த 2009-ம் ஆண்டு மாரடைப்பால் உயிர் இறந்தார்.மைக்கேல் ஜாக்சனுக்கு பாரிஸ் ஜாக்சன் என்ற 20 வயது மகளும் , ஜோசப் ஜாக்சன் மற்றும் பிரின்ஸ் ஜாக்சன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

பாரிஸ் ஜாக்சன் மாடல் அழகியான தனக்கு அதிக மனரீதியான  பிரச்சினை இருப்பதாக அவரே கூறியுள்ளார். இதன் காரணமாக கடந்த 2013-ம் ஆண்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் உயிர் பிழைத்த பிறகு பத்திரிகை ஒன்றுக்கு  பேட்டி அளித்த பாரிஸ் ஜாக்சன்  தான் இதற்கு முன்பு  பலமுறை தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பாரிஸ் ஜாக்சன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் கை நரம்பை அறுத்து தற்கொலை முயற்சிசெய்ததாகவும் பின்பு அவரை ஆம்புலன்சில் முலமாக  மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும்  செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் “லீவிங் நெவர்லேண்ட்” என்ற  ஆவணப்படத்தில் மைக்கேல் ஜாக்சன் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதனால் பாரிஸ் ஜாக்சன் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது இது  பாரிஸ் ஜாக்சன் ரசிகர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்  தான் தற்கொலை முயற்சி செய்ததாக வெளியான செய்தி பொய் என பாரிஸ் ஜாக்சன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.