நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு ஐ.பி.எல். தொடருக்காக வீரர்கள் ஏலம் எடுக்கப்படும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
unknown nodeஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. ஆனால் இதில் வீரர்களை ஏலம் எடுக்கும் நடைமுறை பண்டையகால முறை என்றும், கண்ணியமற்றது என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
unknown nodeதொழில் நேர்த்தியற்ற வகையில் நடத்தப்படும் இந்த ஏலம், வீரர்களின் வாழ்வாதாரத்தில் விளையாடும் நடைமுறை என்றும் அந்த அமைப்பு கண்டித்துள்ளது.
unknown nodeஉலகமே பார்க்கும் வண்ணம், கால்நடைகளைப் போன்று வீரர்களை அணிவகுக்கச் செய்து ஏலம் எடுப்பது வீரர்களுக்கு அவமானகரமானது என்று தெரிவித்துள்ள நியூசிலாந்து வீரர்கள் கூட்டமைப்பு, ஐ.பி.எல். ஏல நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.