"கருணாஸ்சுக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்த தெரியவில்லை" அமைச்சர் அறிவுரை...!!

கிடைத்த வாய்ப்பை நடிகர் கருணாஸ் தவறாக பயன்படுத்துவதாக அமைச்சர் கே.சி.கருப்பணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கிடைத்த வாய்ப்பை நடிகர் கருணாஸ் தவறாக பயன்படுத்துவதாக அமைச்சர் கே.சி.கருப்பணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு:

ஈரோடு புறநகர் மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாளவாடி ஒன்றியத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

unknown node

முதலமைச்சர்ரின் அறிவுரைப்படி  பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், புதிய வாக்காளர்களை சேர்த்தல் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.பசுமை வழி சாலையை பொறுத்தவரை அனைத்து நிதியுதவியும் மத்திய அரசு வழங்குகிறது. மத்திய சுற்றுச்சூழல் கண்டிப்பாக அனுமதி வழங்கும். மாநில சுற்றுச் சூழல் துறை அனுமதி வழங்க தயாராக உள்ளது. பசுமை வழிச்சாலை 100 சதவீதம் அமைய வாய்ப்பு உள்ளது. கருணாசுக்கு சட்ட மன்ற உறுப்பினர் பதவி என்பது மிகப் பெரிய பதவி. அனைவருக்கும் கிடைக்காது. கருணாஸ் தனக்கு கிடைத்த வாய்ப்பை நல்ல முறையில் பயன் படுத்த வேண்டும். நல்ல முறையில் பயன்படுத்த தவறுகிறார்.என்று  அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.எஸ்.ஆறுமுகம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.ஜான், எஸ்.கே.பழனிசாமி, சத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் சி.என். மாரப்பன், தாளவாடி ஒன்றிய செயலாளர் பட்டிமல்லப்பா, பாசில் , அரசூர் பூபதி, அரசூர் எல்வரன்மற்றும் ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

DINASUVADU