தினசரி 1 ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் என்ன விதமான மாற்றங்கள் உடலில் நடக்கும்..?

This artcie is about health benefits of eating an orange daily. Read in- தினசரி 1 ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் என்ன விதமான மாற்றங்கள் உடலில் நடக்கும்..?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் இந்த புளிப்பு- இனிப்பு சுவை கொண்ட பழம் என்றாலே அலாதி பிரியம். ஆரஞ்சு நிறத்தில் அதிக அளவில் பயன்களை கொண்ட பழமாக இது விளங்குகிறது.

தினமும் இந்த பழத்தை சாப்பிட்டு வருவதால் ஏராளமான மாற்றங்கள் நம் உடலில் ஏற்படும் என அண்மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளமையே இதன் முழு பயனிற்கும் காரணம். இனி ஆரஞ்சை ஏன் தினமும் சாப்பிட்டு வர வேண்டும் என்பதற்கான காரணிகளை பார்ப்போம்.

unknown node

வரலாறுஇந்த ஆரஞ்சு பழத்திற்கென்று ஒரு சிறப்புமிக்க வரலாறும் உள்ளது. இதை முதன்முதலில் 2500 கி.மு. கால கட்டத்தில் சீன நாட்டில் தான் அறுவடை செய்தனர். இதற்கு முன்னரே கொலம்பஸ் இந்த விதைகளை பனாமா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் அறுவடை செய்தனர். பிறகு உலகம் முழுவதும் இதன் பயணம் தொடர்கிறது.

unknown node

புற்றுநோய்ஆரஞ்சை அன்றாடம் சாப்பிடுவதால் பெருங்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், தோல் புற்றுநோய் ஆகியவற்றை ஏற்படத்தும் கூடிய அபாயம் குறையுமாம். நமது DNA – வில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதை சரி செய்து, இந்த வகையான புற்றுநோயில் இருந்து உங்களை காக்க கூடிய தன்மை இதற்கு உண்டாம்.

unknown node

இரத்த அழுத்தம்வைட்டமின் பி6 இதில் அதிகம் நிறைந்துள்ளதால் உடலில் இரத்த அழுத்தம் உண்டாகினால் எளிதில் குறைத்து விடும். இதிலுள்ள மெக்னீசியம் இரத்த ஓட்டத்தை சமமான அளவில் உறுப்புகளுக்கு உற்பத்தி செல்வதற்கு வழி செய்யும்.

unknown node

கொலஸ்ட்ரால்கனடா நாட்டில் செய்த ஆய்வின் படி, ஆரஞ்சு பழ தோலில் உள்ள Polymethoxylated Flavones உடலில் கூடி உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது என கண்டறிந்து உள்ளனர். இதை பல ஆய்வுகளில் இன்றளவும் பரிசோதித்து வருகின்றனர்.

unknown node

சர்க்கரை அளவுஅன்றாடம் ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சேர்ந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க முடியுமாம். சர்க்கரை நோயாளிகளுக்கு இது அருமருந்தாக இருக்க கூடும் என ஆய்வுகள் சொல்கின்றன. மேலும், இன்சுலின் உற்பத்தியை சீராக வைத்து உடல் எடையையும் குறைக்குமாம்.

unknown node

மலச்சிக்கல்நார்சத்து ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் இருப்பதால், தினசரி இதை சாப்பிட்டு வருவதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலும். கூடுதலாக செரிமான கோளாற்றை முழுமையாக நீக்க கூடிய தன்மையும் இதற்கு உண்டு.இது போன்ற அனைத்து நன்மைகளும் உங்களுக்கு கிடைக்க தினசரி 1 ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டால் போதும்.