மணமணக்கும் காலிஃபிளவர் வடை செய்வது எப்படி என்பதை பற்றி அறிவீரா

This article gives information about Grooming cauliflower  Do you know how to do it?-manamanakum cauliflower vadai eppadi seivathu enpathai parri ariveera

மாலை நேரங்களில் தேநீர் அருந்துவதற்கு ஒரு சிறந்த ஸ்னாக்ஸ். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவாகும்.

மணமணக்கும் காலிஃபிளவர் வடை செய்வது எப்படி என்பதை பற்றி அறிவீரா ?

மணமணக்கும் காலிஃபிளவர் வடை செய்வது எப்படி என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

தேவையான பொருட்கள்

காலிஃபிளவர் – 1/2 கப்

கடலை மாவு – 2  டீஸ்பூன்

கசகசா – 1/4 டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 1  (பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

unknown node

ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதில் பொடியாக நறுக்கிய காலிஃபிளவர் போட்டு சுத்தம் செய்து வடிகட்டி எடுத்து வைத்து கொள்ளவும்.

பின்பு மற்றோரு  கிண்ணத்தில் சுத்தம் செய்த காலிஃபிளவர், கடலை மாவு,கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், பச்சை மிளகாய், கசகசா,  சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு  கெட்டியாக பிசைந்து  எடுத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி,  போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும். இப்போது சூடான சுவையான காலிஃபிளவர் வடை ரெடி.