தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.1,14,880-க்கு விற்பனை

Hero Image

சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இன்று (ஏப்ரல் 16) மீண்டும் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.14,220-க்கும், ஒரு பவுனுக்கு (சவரன்) ரூ.1,13,760-க்கும் விற்பனையானது.

நேற்று கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.14,320-க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,14,560-க்கும் விற்கப்பட்டது.இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ள நிலையில், 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.14,360-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.1,14,880-க்கும் விற்பனையாகிறது.18 காரட் தங்கம் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.11,940-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.95,520-க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளியின் விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கும், ஒரு கிலோ ரூ.2,75,000-க்கும் விற்பனையாகிறது.ஏப்ரல் மாதம் முழுவதும் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருப்பது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது.

உலக சந்தை நிலவரம், அமெரிக்க டாலர் மதிப்பு மற்றும் புவியியல் அரசியல் பதற்றங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து மாறுபாட்டுக்கு உள்ளாகி வருவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.தங்கம் மற்றும் வெள்ளி விலை தினசரி அடிப்படையில் மாறுபடுவதால், நகை வாங்குவதற்கு முன் சமீபத்திய விலை நிலவரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.