சரும பிரச்சனைகளை தீர்க்கும் வெந்தயம் பேஸ் பேக்....!!!

வெந்தயத்தை கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டுமன்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். வெந்தயம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள்

வெந்தயத்தை கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டுமன்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். வெந்தயம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால், இதனை கொண்டு சருமத்தை எளிதில் பிரச்சனைகளில் இருந்து விடுவித்து கொள்ளலாம்.

சரும சுத்தம் :

unknown node

வெந்தயம் சிறந்த கிளின்சராகவும் செயல்படும். தினமும் வெந்தயத்தை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக 15 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். இதனை கொண்டு சருமத்தை பராமரித்தால், சருமத்துளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் அனைத்தும் நீங்கி, சருமம் சுத்தமாக இருக்கும்.

சரும கருமை நிறம் :

unknown node

வெந்தயத்தை நீரில் ஊற வைத்து பேஸ்ட் செய்து, பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் இருமுறை செய்து வரலாம். வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்தபின் இந்த பேஸ்பேக் போட்டு கொண்டால் சருமம் கருமை அடைவதை தடுக்கலாம்.

சருமம் வெள்ளையாக :

unknown node

வெந்தய பொடியை தயிர் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிக்கும். ஆனால் வெந்தயம் குளிச்சி மிக்கது என்பதால், சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள், இதனை வாரம் 1-2 முறை போடுவது நல்லது.

வெந்தயத்தை பொடி செய்து, அதனை தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து பின் கழுவ வேண்டும். இதனால் பருக்கள் வேறுவது தடுக்கப்படும்.