DYFI சார்பில் ஆர்ப்பாட்டம்:தூத்துக்குடி: திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள தோப்பூரில் சுமார் ஒரு மாதமாக குடிநீர் வராமல் இருந்து வந்துள்ளது. இதனை கேள்விபட்டவுடன் அந்த பகுதிக்கு சென்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளரும், ஒன்றிய செயலாளருமான நந்த குமார்,அந்த பகுதிக்கு சென்று மக்களை சந்தித்து பேசி பின்பு மக்களுடன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு பின்னர் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.
unknown nodeஇதனை அடுத்து குடிநீர் வசதி உடனடியாக செய்து தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றியதலைவர் கதிர்,மாவட்டசெயலாளர் முத்து மற்றும் வாலிபர் சங்கத்தின் முன்னால் செயலாளரான முத்துகுமார் (வழக்கறிஞர்) உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்்து கொன்டனர்.