ஊழல் ராணி மம்தா_வுக்கு ஊழலில் எஸ் ஐ முத்திரை பெற்ற திமுக ஆதரவு என்று ட்வீட் செய்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.மேலும் அவர் மத்திய அரசு C.B.I_யை தவறாக பயன்படுத்துகின்றது . முறையாக அனுமதி பெறாமல் விசாரணை நடத்துவது ஏற்புடையது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு தொடர்ந்து மூன்று நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.இதற்க்கு இந்தியளவில் எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா தனது ட்வீட்_டர் பக்கத்தில் , ஊழல் ராணி மம்தா பானர்ஜிக்கு விஞ்ஞான ரீதியாக கொள்ளை அடித்து ஊழலில் ஐ எஸ் ஐ முத்திரை பெற்ற திமுக உள்ளிட்ட இந்தியாவில் உள்ள ஊழல் கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்துள்ளன. இவைகள் அனைத்தும் 2019 தேர்தலில் வேரோடு களைந்தெரியப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்,.
unknown node