சிறப்பு எஸ்.ஐ கொலை விவகாரத்தில் தொடர்புடைய 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை இன்று அதிகாலை 3 மணியளவில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பூமிநாதன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ஆடுகளை திருடிச் சென்ற திருடர்களை பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவர் திருடனை விரட்டி சென்றதாக கூறப்படும் நிலையில், மர்மநபர்கள் உதவி ஆய்வாளர் பூமிநாதன் இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது இதில் அவர் காவல் ஆய்வாளரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் நள்ளிரவில் நடந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை இன்று அதிகாலை 3 மணியளவில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.